சனி, 23 ஜனவரி, 2010

பத்து கட்டளைகள்


பத்து கட்டளைகள்

ஒரே வாரிசாக இரு
அதற்கு மேலென்றால்
மம்மியை சபி.

தாய் மொழி தவிர்.

செல்வச் செழிப்பிற்கு
டாடியை புகழ்.

பெண்ணென்றால்
முக்கால் நிர்வாணம் கொள்.

ஒரு முறையேனும்
கருக்கலை.

இணையை
வெளிநாட்டில் கொள்.

நேரமிருந்தால்
பிள்ளை பெறு.

ஊரிலுள்ள
மம்மிக்கும் டாடிக்கும்
முகம் காட்டாதே
பணம் காட்டு.

முடிந்தால்
ஹோமில் சேர்த்து விடு.

கடைசியில்
அனாதையாய் சாகவிடு.

1 கருத்து:

  1. மிக்கேல் ராஜ்

    இக்கவிதையை படித்தவுடன் சமீபத்தில் நான் படித்த ஒரு சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது.
    அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கு தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'எனக்கு இனி இவளோடு வாழ முடியாது. அடுத்த திங்கட்கிழமை அறுபதாம் திருமண நாளில் அவளை விவாகரத்து செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.' எனக் கூறி தொடர்பை துண்டிக்கிறார்.
    மகன் அவரச அவசரமாக அமெரிக்காவில் இருக்கும் தனது தமக்கைக்கு தொடர்பு கொண்டு 'வீட்டில் அப்பாவுக்கு அம்மாவுக்கு ஏதோ பிரச்சனை பெரிதாகி விட்டது. இந்த கிழட்டு வயதில் விவாகரத்து செய்யப் போகிறாராம். இவர் அமெரிக்காவில் இருப்பதாக நினைப்பு.... நீ உடனே புறப்பட்டு சென்னைக்கு வா. நானும் வருகிறேன்.'
    மகன் தந்தையை தொடர்பு கொண்டு 'நானும் அக்காளும் உடனே கிளம்பி வருகிறோம். அவசரப்பபட்டு எந்தமுடிவும் எடுக்க வேண்டாம்.'
    தந்தையார் ஆசுவாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு மனைவியிடம் 'ஏய்.. உனது ஆசை நிறைவேறப்போகிறது. இரண்டு பேரும் உடனடியாக கிளம்பி வரப்போகிறார்களாம்'

    பதிலளிநீக்கு