


எல்லைகளற்ற நவீன ஓவியங்கள்அந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு காலைப் பொழுதில் அவரது வீட்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓவியர் வாமணனை அதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாய் எனக்குக் காட்டினார். எனக்குள் ஏற்பட்ட பரவசம் அளவிடமுடியாதாய் இருந்தது. எத்தனை நேர்த்தி... எத்தனை நுட்பம்... அன்றைய நாளிலிருந்து அவரைக் கொண்டாடத் தொடங்கினேன்.
ஓவியர் வாமணன் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வெண்டலிகோடு கிராமத்தை சேர்ந்தவர்.
ஒரு பள்ளி ஆசிரியராய் இருந்து பணி ஓய்வுக்குப் பின் அவர் நவீன ஓவிய உலகிற்குள் வசித்து வருகிறார். நவீன ஓவியங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்ற அவரது வார்த்தைகள் நிஜமாய்த் தான் இருக்கின்றது. ஒரு பூவைச் சுற்றிச் சுற்றி வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் அவரது தூரிகைகளில் நவீன ஓவியங்கள் வந்தமர்ந்து கொண்டிருக்கின்றன.
அவரது ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. உயிரோட்டமான அந்த ஓவியங்கள் இறக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கின்றன.. விரைவில் அவை உலகின் கதவுகளைத் தட்டும்.
பிக்காஸோக்கள். மைக்கேலெஞ்சலோக்கள்... புதிதாய் பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக